×

சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரப்பியதற்கு ஆதாரம் உள்ளது: டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரப்பியதற்கு ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை குறித்து பேசினார். அப்போது, ‘சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்ததாக கூறுகின்றீரே? அதனை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. ‘ஆம், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன; ஆனால் அதை இப்போது வெளிப்படுத்த முடியாது’ என்றார்.

கொரோனா வைரசால் உலகளவில் அதிகம் பாதித்த நாடுகளில் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. ஆனால், சீனா தரப்பில் கொரோனா வைரஸ் சீனாவின் வனவிலங்கு சந்தையிலிருந்து தோன்றியது என்று கூறுவதை அமெரிக்கா மறுத்து வருகிறது. வூஹானின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரசை சீனா உருவாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ‘அமெரிக்க ராணுவம்தான் இந்த வைரஸை சீனாவுக்கு பரப்பியது. கொரோனா வைரசை சீனா உலகிற்கு தரவில்லை. வைரஸ் பரவ நாங்கள் காரணமில்லை’ என்று சீனா கூறிவருகிறது.

இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப், கொரோனாவை சீன வைரஸ் என்று நீண்ட நாட்களாக கூறிவருகிறார். இது தவிர, இந்த வைரஸ் காரணமாக, தேர்தல் நேரத்தில் அமெரிக்காவில் உறுதியற்ற தன்மையை பரப்ப சீனா சதி செய்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Trump ,China ,Wuhan Lab ,Trump Spreading , China, Wuhan, the virus, there is proof, Trump
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்