×

ஊரடங்கில் முடங்கிய குழந்தைகளை குஷிப்படுத்த வீதிகளில் விற்பனைக்கு வந்த விளையாட்டு பொம்மைகள்

புதுச்சேரி: ஊரடங்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த தற்போது வீதிகளில் பைக்கில் விளையாட்டு பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பெரியவர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் முடங்கிக் கிடந்தனர். இதனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் பொழுதை கழிப்பதற்கு உள்அரங்க விளைாட்டுகளில் ஆர்வம் காட்டினர். குறிப்பாக கேரம், செஸ், தாயம், பல்லாங்குழி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரியமிக்க விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினர்.

இருப்பினும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கேற்க முடியாத நிலையில் பொம்மை விளையாட்டு, பிளாஸ்டிக் கார்களை ஓட்டுதல், சமையல் செய்து விளையாடுதல் உள்ளிட்டவற்றில் சிறுபிள்ளைகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேசிய ஊரடங்கு நாளை மறுநாள் (மே3ம்தேதி) முடிவடையும் நிலையில் தற்போது தெருக்களில் விளையாட்டு பொம்மைகள், பொருட்கள் இருசக்கர வாகனங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வீதி வீதியாக அவற்றை வியாபாரிகள் சென்று கூவிகூவி விற்று வருகின்றனர்.

பெற்றோர்களும், குழந்தைகளின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் அவற்றை ஆர்வமுடன் வாங்கிக் கொடுத்து வருகின்றனர். மே மாதம் கோடை விடுப்பு காலம் என்பதால் ஊரடங்கு முடிந்தாலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு குறைவு என்பதால் குழந்தைகள் குஷியில் உள்ளனர்.


Tags : streets ,children , Curfew, Baby, Toys
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...