×

காளையார்கோவில் பகுதியில் வீணடிக்கப்படும் காவிரி குடிநீர்

காளையார்கோவில்: காளையார்கோவிலில் இருந்து கல்லல், காரைக்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சில மாதங்களுக்கு முன்னால் தோண்டப்பட்ட குழி மூடாமல் இருப்பதால், மீண்டும் தண்ணீர் உடைப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காளையார்கோவிலில் இருந்து கல்லல், காரைக்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோட்டோரத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னால் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அவற்றை சரி செய்ய தோண்டப்பட்ட குழி வேலை முடிந்தும் மூடாமல் விட்டதால் சரி செய்யப்பட்ட குடிநீர் குழாய் தற்போது மீண்டும் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகின்றது. தற்போது கோடை வெயில் காலம் தொடங்கிய நிலையில் பல கிராமங்கள் காவிரி கூட்டுக் குடிநீரை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு வீணடிக்கப்பட்டு வரும் குடிநீரால் வருங்காலங்களில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

குழியை  மூட பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் காளையார்கோவிலைச் சுற்றியுள்ள உள்ள கிராமங்களில் பல்வேறு இடங்களில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணா
கிறது. பலமுறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. காவிரி குடிநீர் குழாய்களை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாததால், இப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்துகளை சந்திக்க நேரிடும் நிலை உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒருவர் மது போதையில் தடுமாறி விழுந்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Tags : Cauvery ,area ,Kaliyarikovil , Cauvery ,drinking water , Kaliyarikovil area
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது