×

பெரம்பலூர் அருகே பயங்கரம்: செலவுக்கு பணம் தர மறுத்ததால் தாய், தந்தை வெட்டிக்கொலை

* சாக்குமூட்டைகளில் அடைத்து வைத்து வீட்டிற்குள் விடிய விடிய இருந்த மகன்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே செலவுக்கு பணம் தர மறுத்ததால் தாய், தந்தையை வெட்டிக் கொன்று சாக்கு மூட்டைகளில் அடைத்து விடிய விடிய வீட்டுற்குள் அரிவாளுடன் இருந்த மகன் ேநற்று கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் வசிந்து வந்தவர் ராமசாமி (65). விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி செல்லம்மாள் (60). இவர்களது மகன் ரமேஷ்(35). இவரது மனைவி தங்கமணி (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக தங்கமணி கணவனை பிரிந்து, 3 குழந்தைகளோடு அதே தெருவில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் அப்பகுதி வயல் கிணற்றில் தவறி விழுந்ததால் வலது கால் முறிந்து ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தார். பின்னர் லாரி மோதியதில் அவரது தலையில் உள்காயம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி கோபப்பட்டு பெற்றோரிடமும், தெருவில் உள்ளோரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வாசலில் கட்டிலில் படுத்திருந்த தந்தை ராமசாமியை வீட்டுக்குள் வரும்படி அழைத்த ரமேஷ், அவரிடம் செலவுக்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அவர், பணம் இல்லை. வேறு யாரிடமாவது வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ரமேஷ் அடுப்பு ஊத பயன்படுத்தும் ஊதாங்குழால் தந்தையை தாக்கியுள்ளார்.

மேலும் அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளார். இதில் ராமசாமி துடி துடித்து இறந்தார். இதனை பார்த்து செல்லம்மாள் சத்தம் போட்டதால் அவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்துள்ளார். பின்னர் இருவரின் உடலையும் தனித்தனி சாக்கு பைகளில் திணித்து வைத்து கதவை சாத்தி விட்டு பயத்துடன் தூங்காமல் இருந்துள்ளார். நேற்று காலை வீட்டின் அருகே வந்த ரமேஷின் மனைவி தங்கமணி, கழிவுநீர் துளை வழியாக ரத்தம் வெளியேறி இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் வீட்டு கதவை உடைத்தவுடன் அச்சத்துடன் அலறியபடி அரிவாளுடன் வெளியே ஓடிவந்த ரமேஷ், வீட்டு மாடியில் ஏறிநின்றார்.
யாராவது மாடிக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என அரிவாளை சுழற்றியபடி சத்தம் போட்டுள்ளார். கிராம மக்கள் வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது சாக்குப்பையில் ரமேஷின் பெற்றோரின் உடல்கள் திணிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று வீட்டு மாடியில் அரிவாளை காட்டி மிரட்டி கொண்டிருந்த ரமேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Perambalur ,Terror ,Cut Off , Perambalu, money, mother, father, cuticle
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி