×

கொரோனா அச்சுறுத்தல்: ஆஸ்கர் விருது விதிமுறைகளில் மாற்றம்

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் திரைப்படங்கள் தயாரிப்பு, திரையிடல் போன்றவற்றில் பல மாற்றங்களும், பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்கர் விருது கமிட்டி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதி நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் விருது தேர்வுக்கு சில விதிமுறைகளை தற்காலிகமாக தளர்த்தி உள்ளது. பொதுவாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்கள் தியேட்டர்களில் குறைந்தபட்சம் 7 நாட்கள் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் கொரோனா வைரஸ் காலத்தில் பெரும்பாலான படங்கள் ஓடிடி பிளாட்பாரம் வழியாக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இதனால் இந்தப் படங்களை ஆஸ்கருக்கு அனுப்ப முடியமா என்று தயாரிப்பாளர்கள் தயங்கிக் கொண்டிருந்தார்கள். அவற்றுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் வருகிற விருது விழா தேர்வுக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்களும் தகுதி பெறுகிறது. ஆனாலும் அந்தப் படங்கள் தியேட்டரில் வெளியிட திட்டமிடப்பட்ட படங்களாக இருக்க வேண்டும். ஆன்லைனில் வெளியிடுவதற்கென்றே தயாரிக்கும் படங்கள் தேர்வு செய்யப்படாது. என்று ஆஸ்கர் விருது கமிட்டி அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த விதிமுறை தளர்வு தற்காலிகமானதுதான் கொரோனா வைரஸ் பிரச்சினை சீரானதும் பழைய விதிமுறையே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona, Oscar Award, Curfew
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...