லாக்டவுனில் பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறார் ஐஸ்வர்யா

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையி–்ல், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:தினமும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புகளுக்கு சென்று எப்போதும் பிசியாக இருப்பேன். ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, முதலில் நன்றாக சமையல் செய்ய கற்றுக்கொள்ள தோன்றியது.

அதன்படி இப்போது நன்றாக சமைக்க கற்றுக்கொண்டேன். நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தியிடம் பேசி, ஸ்கைப் மூலம் பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறேன். தவிர, கலாசேத்ரா மாணவர் ஒருவரும் வீடியோகால் மூலம் எனக்கு நடனம் கற்றுக் கொடுக்கிறார். சின்ன வயதில் நான் குச்சுப்புடி நடனம் கற்றுக்கொண்டது ஞாபகம் இருந்தாலும், இப்போது என்னால் சரிவர ஆட முடியவில்லை.எனவே,  குச்சுப்புடி நடனம் கற்றுக்கொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>