×

சில்லி பாயின்ட்…

* கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் மற்றும் சக பயிற்சியாளர்கள் பரத் அருண், விக்ரம் ரத்தோர், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி பயிற்சியாளர்களுடன் ஆன்லைனில் தங்கள் அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
* தற்போதுள்ள நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ரோகித் ஷர்மா தான் என்று முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
* போட்டிக்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால் இந்தியாவில் நடைபெற இருந்த உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடர் செர்பியா தலைநகர் பெல்கிரேடுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், 2018ம் ஆண்டு இந்தியாவில் நடந்த மகளிர் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்புக்கான கட்டணத்தையே இந்திய பாக்சிங் கூட்டமைப்பு இதுவரை முழுமையாக செலுத்தாமல் இழுத்தடித்து வருவதாக சர்வதேச பாக்சிங் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
* இந்தி திரைப்பட நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு சச்சின், விராத் கோஹ்லி உட்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருது வழங்கும் விழா ஆன்லைனில் நடைபெற்றது. கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருநாள் போடிகளில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். டி20 போட்டிகளில் சிறந்த வீரர் விருதை ராஸ் டெய்லர் தட்டிச் சென்றார்.


Tags : batsman , ODIs, T20 matches, world best batsman, Rohit Sharma
× RELATED சில்லி பாயின்ட்