×

சுழலை சமாளிப்பதில் ஸ்மித்தை விட சோயிப் சூப்பர்… சாஹல் பாராட்டு

புதுடெல்லி: சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடுவதில் ஸ்டீவன் ஸ்மித்தை விட சோயிப் மாலிக்தான் சூப்பர் என்று இந்திய நட்சத்திரம் யஜ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். ஸ்பின்னர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடுபவர்களின் பட்டியலை சாஹல் நேற்று சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது: சுழற்பந்து வீச்சை  சிறப்பாக எதிர்கொள்ளும்  வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் எப்போதும் முதல் இடத்தில் இருக்கின்றனர். அதேபோல் நியூசிலாந்து கேப்டன்  கேன் வில்லியம்சனும் சுழற்பந்தை எதிர்கொள்ளும் விதம்  பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அதிலும் மெதுவாக பந்து சுழலும் ஆடுகளத்தில் அவர் இன்னும் மெதுவாக விளையாடுவது பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

அதேபோல்  சுழற்பந்துகளை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடுவதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை விட பாகிஸ்தானின் சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடுவார். அவருக்கு 2018ம் ஆண்டு  நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பந்து வீசினேன். அப்போது சோயிப் பந்தை எதிர்கொண்டு ஆடும் முறை சிறப்பாகவும், பலனளிப்பதாகவும் இருந்தது என்னை மிகவும் ஈர்த்தது. ஆடுகளம் மற்றும் பந்துவீச்சின் தன்மைக்கு ஏற்ப ஒரு, ஒரு ரன்னாக சேர்த்த விதம் அருமை. இவ்வாறு சாஹல் கூறியுள்ளார்.

Tags : Shoaib ,Smith , Swirl, Smith, Sahel
× RELATED சில்லி பாயின்ட்...