×

டாக்டர் சைமனை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 12 பேர் ஜாமீன் கோரி மனு

சென்னை: டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்யவிடாமல் தகராறு செய்த 12 பேர் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்துள்ளனர். கொரோனாவால் நரம்பியல் நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல்  கீழ்ப்பாக்கத்திலும் அண்ணா நகரிலும் சிலர் கலங்கம் செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அண்ணா நகர் போலீசாரும், டி.பி.சத்திரம் போலீசாரும், கலவரத்தில் ஈடுபட்ட 22 பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் அண்ணா நகர் காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்ட சோமசுந்தரம், சுரேஷ், விக்னேஷ் குமார், குமார் (எ) பிச்சை, விஜய், மணி ஆகியோரும், இதேபோல், டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட குமரேசன், மோகன், ஜெயமணி, ஜெயபிரபா, ஜெனிதா, தமிழ்வேந்தன் ஆகியோர் என்ன, 12 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த மனு மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : Simon , Dr. Simon, Corona
× RELATED அயர்லாந்து பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ்