×

ரேபிட் கிட் கொள்முதல் மத்திய, மாநில அரசுகள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா பரிசோதனைக்கு தரமற்ற ரேபிட் கிட் வாங்கிய விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய 37 லட்சம் ரேபிட் கிட்டுகளை மத்திய  அரசு கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இவை, ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், சீனாவைச் சேர்ந்த வொண்ட்போ நிறுவனமும் ஒன்று. இந்த கருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல்,

கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அந்த கருவிகளை கொள்முதல் ஆர்டர்களுக்கு  தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசும் தமிழக அரசும் 2 வாரங்களில் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.


Tags : Rapid Kid ,State ,State Governments Central ,Central ,Governments , Rapid Kid, Central, State Governments, High Court
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...