×

எந்த அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா பாதிப்புக்குள்ளான மாங்காடு சப்-இன்ஸ்பெக்டர்: போலீசாரிடையே பீதி

பூந்தமல்லி: சென்னையை அடுத்த மாங்காடு போலீஸ் நிலையத்தில் 56 வயதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரவாயலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த  நாட்களுக்கு முன்பு எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக சென்று ரத்தம் பரிசோதனை செய்து விட்டு வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இவருக்கு கொரோனே  உறுதி செய்யப்பட்டதால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவரது வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்துள்ளனர்.  இவர் மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில் ரோந்து வாகனத்தில் பணியில் ஈடுபடுவதால் போலீஸ் நிலையத்திற்கு அதிகம் செல்வதில்லை. எந்தவித அறிகுறியும் இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளானது மாங்காடு போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாங்காடு போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 


Tags : Sub-Inspector ,Corona ,Mangadu ,Mankadu ,Panic In Police , Corona, Mangadu Sub-Inspector, Police
× RELATED தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது