×

சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியை தேடுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சாராயம் காய்ச்சி விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகம், எஸ்ஐக்கள் சுரேஷ், வெங்கடேசன், சிறப்பு பிரிவு நாகராஜ் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போடப்பட்டதுதெரிந்தது. உடனே போலீசார், அங்கிருந்த வாலிபரை பிடித்தனர். ஒருவர் தப்பிவிட்டார். விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த நூர்ஹான் (23) என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Youth arrested
× RELATED வேலூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் மீட்பு