×

சென்னை மாநகராட்சியில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: சிறப்பு குழுவிற்கு உத்தரவு

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மண்டல வாரியாக 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு குழுவை முதல்வர் நியமித்துள்ளார்.  இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியாதவது: சென்னையில் குடிநீர் வாரிய லாரிகளில் தண்ணீர் பிடிக்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. குடிசை பகுதிகளில் பொது கழிவறைகளை அனைவரும் பயன்படுத்துவதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதை தடுக்க அனைத்து தெருக்களிலும் குடிநீர் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகளில் ஏசி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் மறுபயன்பாட்டு முககவசம் வழங்கப்பட உள்ளது. 10 நாட்களுக்குள் சென்னையில் ெகாரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு  பேசியுள்ளார்.


Tags : Madras Corporation, Special Committee, Corona
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...