×

முரசு, நீர்... முதன்முறையாக புயல்களின் பெயா் பட்டியலில் இடம்பிடித்த 2 தமிழ் பெயர்கள்..!

சென்னை : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களின் பெயர் பட்டியலில் முதன்முறையாக 2 தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகின்றன. இந்த புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது 8 நாடுகள் சார்பில் மொத்தம் 64 பெயர்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டியலில் இருந்த 63 பெயர்கள் புயல்களுக்கு சூட்டப்பட்டுவிட்டன. தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட ஆம்பால் என்ற பெயர் மட்டுமே மீதம் உள்ளது.

அடுத்து வரும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புயல்களுக்கு பெயர் வைக்கும் அட்டவணையை தயார் செய்யும் பணிகள் தொடங்கின. இதற்கான இறுதி பட்டியலில் முரசு, நீர் என 2 பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய வானிலை துறையின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, புயல்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயாா் செய்வது குறித்து முதல் முறையாக நமக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதில் கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன.இதில் நாங்களும் பெயா்களை பரிசீலித்ததுடன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பெயா்களையும் பரிசீலித்து அனுப்பியிருந்தோம்.

இதில் நாங்கள் கொடுத்த முரசு எனும் பெயா், பட்டியலில் 28-வது இடத்தில் உள்ளது. இது தவிா்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட நீா் எனும் பெயரும் 93-வது இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும்“ என்று அவா் தெரிவித்தாா். இந்த அட்டவணையில் மொத்தமாக 169 பெயர்கள் தற்போது இடம்பெற்று உள்ளது.

Tags : Tamils ,Murasu ,storms , Murasu, water, first time, storms, pea, list, Tamil names
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!