×

தெற்கு அந்தமான் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 - 50 கி.மீ.வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை : தமிழகம், புதுவை, காரைக்காலில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர், திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தகாற்று (30 முதல் 40 கி.மீ.) மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

1.5.2020 - தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கிமீ முதல் 50 கிமீ வரையிலும் அவ்வப்போது 60 கிமீ வரையிலும் வீசக்கூடும்.

2.5.2020 - தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிமீ முதல் 55 கிமீ வரையிலும் அவ்வப்போது 65 கிமீ வரையிலும் வீசக்கூடும்.

3.5.2020,4.5.2020 - தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிமீ முதல் 60 கிமீ வரையிலும் அவ்வப்போது 70 கிமீ வரையிலும் வீசக்கூடும்.

மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டாவில் 7 செ.மீ. மழையும் ஓசூர், ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழையும் மேட்டூரில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.   

இதனிடையே தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கில் நகரும் எனவும் வடகிழக்கில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம்  கூறியுள்ளது.  


Tags : Thunderstorms ,Bengal ,sea areas ,Andaman ,Met , South, Andaman, South East, Bengal Sea, Cyclone Wind, Fishermen, Warning, Meteorological Center
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...