×

நோயுற்ற மகளுடன் அருகில் இல்லாமல் மருத்துவ பணி : மருத்துவரின் குழந்தை உயிரிழந்த சோகம்!!

போபால் : தனது குழந்தை நோயுற்று இருப்பது தெரிந்தும் அவளுடன் இல்லாமல் மருத்துவமனையில் மருத்துவ பணியை தொடர்ந்த மருத்துவரின் குழந்தை உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 30,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கூட அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் வகையில் சமூக வலைதளங்களில் மக்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனது குழந்தை வீட்டில் நோயுற்று இருப்பது தெரிந்தே வீட்டிற்கு செல்லாமல் மருத்துவ பணியை தொடர்ந்த மருத்துவரின் குழந்தை உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் பகுதியை சேர்ந்த மருத்துவர் தேவந்திர மெக்ரா. இவர் இந்தூரில் மருத்துவ பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இவரது 15 மாத குழந்தை இறந்துள்ளது.

மகள் நோயுற்று இருந்த காலத்திலும் கூட, அவர் மகளுடன் இல்லாமல் மருத்துவமனையில் மருத்துவ பணியை தொடர்ந்துள்ளார்.இது குறித்து மருத்துவர் கூறும் போது, அவள் ஹைட்ரோசெபாலஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். ஆனால் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் எனது சேவை நாட்டிற்கும் தேவை என்பதை உணர்ந்தேன். அதனால் மருத்துவ பணியை தொடர முன்வந்தேன். தற்போது அவள் இறந்து விட்டாள். அவளை பார்க்கச் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர், என்றார்.

Tags : Doctor ,tragedy , Illness, Daughter, Medical Work, Physician, Child, Sadness
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...