×

கொரோனாவை குணப்படுத்த நடந்த சோதனையில் ரெம்டிசிவிர் மருந்து மிகவும் பயன் அளித்துள்ளது : அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்

வாஷிங்டன் : கொரோனாவை குணப்படுத்த நடந்த சோதனையில் ரெம்டிசிவிர் மருந்து மிகவும் பயன் அளித்துள்ளதாக அமெரிக்க மூத்த மருத்துவர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனாவை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்காகப் பல நாடுகள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கிலியட் சயின்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரெம்டெசிவிர் முதன்முதலில் எபோலாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுப்பதன் மூலம் அவர்களின் சிகிச்சை கால அளவு 15 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரத்து 63 பேரை கொண்டு அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. அவர்களில் சிலருக்கு மட்டும் ரெம்டெசிவிர் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வேறு சில மருந்துகள் வழங்கப்பட்டன.இந்த ஆய்வில் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் குணமடையாத விகிதம் 8 சதவீதமாகவும் வேறு சில மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களின் குணமடையாத விகிதல் 11.6 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்தது. ஆனால் ரெம்டெசிவர், முதல் மருத்துவ பரிசோதனை முயற்சியில் தோல்வியை சந்தித்ததாக சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க மருத்துவர் ஆண்டனி ஃபாசி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், கிலியட் நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவிர் மருந்து அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டது.  இது கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பதில் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.   இந்த சோதனை முடிவுகள் மூலம்  ரெம்டிசிவிர் மருந்து முழு அளவில் குணமளிப்பதுடன் குணமாகும் காலத்தையும் வெகுவாக குறைத்துள்ளது.  இதன் மூலம்  இந்த வைரசைத் தடுக்க ஒரு மருந்து உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சோதனையின் முடிவுகள் தேவைப்படுவோருக்கு எளிதில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதற்கு முன்பு சீனாவில் நடந்த சோதனைகள் முழு அளவில் நடைபெறவில்லை எனக் கூற வேண்டும்.  அது முழுமையாக நடந்த சோதனை இல்லை என்பதால் அதைக் கருத்தில் கொள்ளக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : US ,trials ,researchers ,investigators , Corona, Trial, Remedicavir, Drug, USA, Researchers
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!