×

லாரி, ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதி அதிமுக மற்றும் தேசிய ஆசிரியர் சங்கம் இணைந்து 130 லாரி டிரைவர்கள் மற்றும் 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊரடங்கை யொட்டி திருவள்ளூரில் தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.  இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நகரமன்ற தலைவருமான அதிமுக மாவட்ட துணைச் செயலாளருமான கமாண்டோ ஏ.பாஸ்கரன் தலைமை தாங்கினார். போலீஸ் டிஎஸ்பி கங்காதரன், நகராட்சி ஆணையர் சந்தானம் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் திருலோகச்சந்தர், ஆர்.கே.சாமி, எதிரொலி, அதிமுக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், எஸ. ஏ.நேசன், எம்.பி.லோகநாதன், செந்தில்குமார், குணசேகர், வசந்த், காங்கிரஸ் சி.மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : auto drivers , Lorry, Auto Drivers, Relief, Corona, Curfew
× RELATED திருப்பத்தூரில் லாரி கவிழ்ந்து...