×

முழுஊரடங்கை மீறிய மளிகை கடைக்கு சீல்

பூந்தமல்லி:  பூந்தமல்லியில் முழு ஊரடங்கை மீறி ெசயல்பட்ட மளிகை கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். முழுஊரடங்கு உத்தரவு காரணமாகவும் பூந்தமல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கடைகள் திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பூந்தமல்லியில் விதிமுறை மீறி செயல்பட்ட மளிகைக்கடையில் 10க்கும் மேற்பட்ட வாடிக்கையாளரை சமூகவிலகல் இல்லாமல் நிறுத்தி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில்  போலீசார் டிரங்க் சாலையில் நேற்று ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் தடையை மீறி மளிகை கடை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. போலீஸ் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் அந்த கடையை மூடி சீல் வைத்தனர். மேலும் கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் ஜாமீனில் விடுவித்தனர்.


Tags : grocery store , ull curfew, grocery store, sealed
× RELATED சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மளிகை கடைக்கு சீல்