×

தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை: மாமல்லபுரம் டிஎஸ்பி எச்சரிக்கை

மாமல்லபுரம்: தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாமல்லபுரம் டிஎஸ்பி எச்சரித்தார். நாடு முழுவதும் 144 தடை அமலில் உள்ளது. இதையொட்டி, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கங்கைகொண்டான் தெரு சந்திப்பு, பஜனை கோயில் தெரு சந்திப்பு, கோவளம் சாலை உள்பட முக்கிய சந்திப்புகளில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது, கங்கைகொண்டான் மண்டபம் அருகே தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் அவர்களை, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வைத்து, கொரோனா நோய் மிக கொடிய நோய் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தில் மட்டும் வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் ஊர் சுற்ற வேண்டாம். அதையும் மீறி சாலைகளில் சுற்றித்தரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags : roads , Mamallapuram DSP, Corona
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...