×

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் முதியவர், கர்ப்பிணி பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தவேளையில் குன்றத்தூர் காய்கறி வியாபாரியின் தந்தை, குன்றத்தூரை சேர்ந்த இளம்பெண், வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கத்தை சேர்ந்த கர்ப்பிணி, சுகாதார ஆய்வாளராக பணியாற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் 1, பாதிக்கப்பட்டோர் 24, சிகிச்சையில் இருப்பவர்கள் 14 என எண்ணிக்கை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் குன்றத்தூர், கன்னியப்பன் நகர், சேரன் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12 பேருக்கு கொரோனா உறுதியானது. மாவட்டத்துக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், அனாகபுத்தூர், பம்மல், பல்லாவரம் கன்டோன்மென்ட், செம்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று உறுதியானவர்களின் உறவினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பிலும், 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், முடிச்சூர், கீழ்க்கட்டளை, பழைய பெருங்களத்தூர், பல்லாவரம் கன்டோன்மென்ட் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

தம்பதி, 2 குழந்தைகளுக்கு தனிமை கடந்த 5 நாட்களுக்கு முன் ஒரு தம்பதி, தங்களது
2 குழந்தைகளுடன் புதுச்சேரியில் இருந்து கடல் வழியாக படகு மூலம் மாமல்லபுரம் வந்து, அங்குள்ள ஒரு வீட்டில் தங்கினர். தகவலறிந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் ஆகியோர் அங்கு சென்று, தம்பதியிடம் புதுச்சேரியில் இருந்து படகு மூலம் மாமல்லபுரம் வந்தது பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்களை, அதே வீட்டில் 2 குழந்தைகளுடன் 21 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டனர். மேலும், அந்த வீட்டின் முகப்பில் நோட்டிஸ் ஒட்டினர்.

Tags : persons ,Kanchi ,districts ,Coronation ,Chengai ,Sengai , Chengi, kanji, old man, pregnant woman, corona
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...