×

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக திருமூர்த்தி நியமனம்

புதுடெல்லி: ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியாக இருப்பவர் அக்பரூதின். இவர் விரைவில் ஓய்வு பெற இருப்பதையொட்டி அந்த பதவிக்கு 1985ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தியை நியமனம் செய்து வெளியுறவு அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
புதிய பிரதிநிதி திருமூர்த்தி தற்போது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகளுக்கான பிரிவு செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் பிறந்தவர். இதுபோல் சுலோவேனியா நாட்டின் இந்திய தூதராக நம்ரதா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரியா நாட்டின் அடுத்த தூதராக ஜெய்தீப் மசூம்தாரும், கத்தார் நாட்டுக்கான இந்திய தூதராக வெளியுறவுத்துறை இணை செயலர் தீபக் மிட்டலும், பியூஸ் ஸ்ரீவஸ்தவா பஹ்ரைன் நாட்டின் புதிய தூதராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Thirumurthy ,India ,Permanent Representative ,UN Thirumurthy ,UN , UN, India, Thirumurthy
× RELATED திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா...