×

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு உதவியாக தற்போது ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். போலீசாருக்கு உதவும் வகையில் மத்திய ஆயுதப்படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தானாக முன் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து தமிழக அரசுக்கு தெரிவித்திருந்தனர். அவர்களின் விருப்பத்தை தமிழக அரசு ஏற்று மத்திய ஆயுதப்படை வீரர்கள் தகுதி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்த தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து மத்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்கள், அதாவது 40 முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மாநகர் பகுதியில் வசிக்கும் நபர்கள் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகங்களில் பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்று காவல் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக காவல்துறை ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்களை போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

விருப்பமுள்ள மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அந்த பரிசோதனை அடிப்படையில் அவர்கள் வரும் நாட்களில் இருந்து போலீசாருடன் இணைந்து மாநிலம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.Tags : Federal Armed Forces ,veterans ,Corona Defense: Police ,Corona Defense: Police Notification for Retired Federal Armed Forces , Corona Defense, Federal Armed Forces, apply, police
× RELATED தீயணைப்புத்துறை இயக்குனர் பேட்டி:...