×

பள்ளி மாணவிகளை சீரழித்த காமக்கொடூரன் காசி: பாடகி சின்மயி பகீர் தகவல்

நாகர்கோவில்: பள்ளி மாணவிகளை காமகொடூரன் காசி சீரழித்ததாக பாடகி சின்மயி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.  குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவர், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டார். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது, லேப்டாப்பில் 80 பெண்களுடன் பல்வேறு கோணங்களில் நெருக்கமாக இருந்த வீடியோ, படங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.  

இந்தநிலையில், காமக்கொடூரன் காசியின் லீலைகள் பற்றி முன்னரே நான் குற்றம்சாட்டியிருந்தேன் என்று பாடகி சின்மயி கூறி 20 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி சம்பவம் போன்று நாகர்கோவிலில் ஆண்மகன் ஒருவன் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பல பெண்கள் சந்தோஷமாக எனக்கு இன்ஸ்டாகிராமில் இந்த தகவலை அனுப்பினர். சுஜி டெமோ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், டிக்டாக், பேஸ்புக்கில் இவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

பிட்னஸ் பயிற்சி கொடுப் பதாக பல பெண்களிடம் பழகி அதனை வீடியோ எடுத்து கணவரிடம் கூறிவிடுவேன் என்று கூறுவது, திருமணம் செய்து கொள்வேன் என நம்ப வைத்து ஏமாற்றி படம் எடுப்பது இவரது வாடிக்கை. பள்ளி மாணவிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளேன் என்று கொச்சையாக பதிவிட்டுள்ளார். அதனால், யாராவது பள்ளி மாணவி இவர் மீது புகார் செய்ய வேண்டும். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியே வந்தபோது அதில் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் அசிங்கப்படுத்தி இவர் ஒரு வீடியோ போட்டிருந்தார். இந்த வீடியோவை நான் விமர்சித்து பதிவு செய்திருந்தேன். அதற்கு சுஜி டெமோ என்னையும் திட்டி அசிங்கமாக பதிவு போட்டிருந்தார்.

ஸ்கூல் பிள்ளைகளை கூட நான் பலாத்காரம் பண்ணியுள்ளேன், எனக்கு போலீசை தெரியும், லாயரை தெரியும், என்மீது யாரும் கை வைக்க முடியாது என்று எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான். அப்போது அதனை ரிப்போர்ட் செய்து நான் இன்ஸ்டாகிராமில் அவரை பிளாக் செய்திருந்தேன்.  மேலும், பெண்கள் நிறைய பேர் அவர் பிளாக்மெயில் செய்கிறார் என்று கூறியிருந்தனர். நான் தயவு செய்து யாராவது ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும் என்று  அப்போது கெஞ்சினேன், போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட வருகிறேன் என்றும் கூறியிருந்தேன். ஆனால் தங்கள் பெண்ணின் எதிர்காலம் என்று பலரும் பயந்துவிட்டனர். சுஜி மேல் இப்போது கேஸ் போட்டவர்களை நான் பாராட்டுகிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குண்டர் சட்டத்தில் கைது:
பெண்களிடம் காதலிப்பதாக பழகி ஆபாசமாக படம் பிடித்து பணம் பறித்ததாக நாகர்கோவிலை சேர்ந்த காசியை போலீசார் கைது செய்தனர். காசி மீது பல்வேறு  புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று இரவு உத்தரவிட்டார்.


Tags : schoolgirls ,Sinhalese Singer of Debate , School students, kasi, singer Chinmayi
× RELATED குடும்பங்களில் தாண்டவமாடும் வறுமை...