×

வெப்ப சலனம் நீடிப்புதமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்

சென்னை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும் வெப்பச் சலனம் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி மேலும் நீடிப்பதை அடுத்து கோவை, நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதையடுத்து நாளை தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிமீ வேகம் முதல் 50 கிமீ வேகம் வரையும் சில நேரங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசும். மே 2ம் தேதியும் அதே  நிலை நீடிக்கும், 3ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதாலும் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



Tags : Thunderstorms ,heatwave , Heat, Tamil Nadu, Rain
× RELATED வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய...