×

கொரோனா தடுப்பு பணி மாஜி சிஆர்பிஎப் ஊர்க்காவல் படையினருக்கு உணவுப்படி 7.5 கோடி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா களப்பணியாற்றும் ஊர்காவல், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படையினருக்கு உணவுப்படி வழங்க 7.61 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா விடுத்துள்ள அரசாணை: கொரோனா தடுப்பு களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற 2000 எல்லை பாதுகாப்பு படையினருக்கும், 14,708 ஊர்காவல் படையினருக்கும் உணவு படி  வழங்க மாநில பேரிடர் நிதியில் இருந்து நிதி விடுவிக்கப்படுகிறது. அதன்படி ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படையினருக்கு கடந்த மார்ச் 27ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை உணவுப்படி வழங்கப்படுகிறது.

எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் ரேங்கில் உள்ள 50 பேருக்கு தினமும் 900 வீதம் 21 நாட்களுக்கு 9 லட்சத்து 45 ஆயிரமும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 1950 பேருக்கு தினசரி 750 வீதம் 21 நாட்களுக்கு 3.07 கோடி விடுவிக்கப்படுகிறது. 12043 ஆண்கள் மற்றும் 2665 பெண்கள் உட்பட மொத்தம் 14,708 ஊர் காவல் படையினருக்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை 30 நாட்களுக்கு தினசரி 150 வீதம் 6.61 கோடி நிதி விடுவிக்க்கப்படுகிறது.

Tags : Coroner Prevention Squadron Maj ,guards ,CRPF Guards ,CRPF ,food Coroner ,Tamil Nadu ,Prevention Squadron , Corona, Maji CRPF Guards, Government of Tamil Nadu
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ