×

சிறுவன் ‘கொரோனா’வுக்கு பரிசளித்த ஹாலிவுட் நடிகர்

சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரின் மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர்கள் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றனர்.இந்நிலையில் கொரோனா டி வ்ரீஸ் என்கிற 8 வயது சிறுவன் டாம் ஹாங்க்ஸுக்கு கடிதம் எழுதியிருந்தான். அந்த கடிதத்தில், ‘உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். தற்போது நலமாக இருக்கிறீர்களா? எனக்கு என் பெயர் ரொம்ப பிடிக்கும்.

ஆனால் பள்ளியில் சிலர் என்னை கொரோனா வைரஸ் என்று அழைக்கிறார்கள். என்னை கொரோனா வைரஸ் என்று அழைத்தால் கவலையாக இருப்பதோடு கோபமும் வருகிறது’ என்று கூறியிருந்தார். உடனே சிறுவன் கொரோனா டி வ்ரீஸ்க்கு டைப் ரைட்டர் ஒன்றை பரிசாக அனுப்பி அந்த கடிதத்திற்கு டாம் அளித்த பதிலில் கூறியது:
உங்களின் கடிதத்தால் என் மனைவியும், நானும் பெருமையாக உணர்கிறோம். உங்களுக்கு நானும் ஒரு நண்பன். இந்த டைப்ரைட்டர் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்துவது என்று பெரியவர்களிடம் கேட்கவும். இந்த டைப்ரைட்டர் மூலம் எனக்கு பதில் அனுப்பவும் என்று தெரிவித்தார்.


Tags : actor ,Hollywood ,Corona'. , Boy, Corona, Hollywood actor
× RELATED எனக்கு 70 வயது ஆகிவிட்டதா? ஜாக்கி சான் அதிர்ச்சி