×

லாக்டவுனில் மனஅழுத்தம் விலக சந்தோஷமாக இருப்பதாக நடிங்க: சொல்கிறார் செல்வராகவன்

சென்னை: ஊரடங்கு காரணமாக பலர் மன அழுத்த நோய்க்கு ஆளாகி வருகின்றனர். இதிலிருந்து விடுபட இயக்குனர் செல்வராகவன் யோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியது:  வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக இருக்க முடிவு செய்யலாம் அல்லது சோகமாக இருக்க தீர்மானிக்கலாம். சந்தோஷமாக இருப்பதை தேர்வு செய்க. சந்தோஷமாக இல்லாவிட்டாலும் அப்படி இருப்பது போன்று சில நாட்களுக்கு நடியுங்கள். பின்னர் அதுவே பழகிவிடும். நீங்கள் போலியாக சந்தோஷப்படுகிறீர்கள் என்பதே மறந்துவிடும். இறுதியில் சந்தோஷமாக இருக்கத் துவங்கிவிடுவீர்கள். இது என் அனுபவம். இதுவே மன அழுத்தம் போன்ற நோய்களிடமிருந்து விடுபட சல்யூஷன் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Selvaraghavan ,Quit , Lockdown, mental agony, gossip
× RELATED அப்பா இறந்து ஒரு வாரத்துக்கு பிறகு...