×

கேமராவ கரீக்டா செட் பண்ணுங்க பாஸ்வீட்ல இருந்து வேல... பேண்ட் கூட இல்ல கீழ...என்னமா யோசிக்கிறாங்கய்யா

‘‘அது படிக்கும்போது எடுத்த போட்டோ. அதனாலதான் குடுமி இல்லை. பாஸ்போர்ட் சைஸ் போட்டோதானேன்னு, அன்னிக்கு நான் பேண்ட் கூட போடாமத்தான் உட்கார்ந்தேன். அதெல்லாம் உமக்கு தேவையா?’’ - இது, சாமி படத்தில் லைசென்ஸ் போட்டோவை பார்த்து விசாரிக்கும் டிராபிக் போலீசை கலாய்க்கும் விவேக் காமெடியில் வரும் டயலாக். இப்பக்கூட, ஊரடங்கால் ‘வீட்டில் இருந்தே வேலை’ பற்றி டிக் டாக்கில் உலா வரும் வீடியோக்களில், வீடியோ கான்பரன்சிங்கில், டை கட்டிய சட்டை, நைட்டி மேல் ஷால் மட்டும் போட்டுக்கொண்டு வேலை செய்வது போல் கலாய்ப்புகள் வருகின்றன.மாந்தோப்பு கிளியே படத்தில் கஞ்சனாக நடித்த சுருளிராஜன், ‘இருட்ல தானே இருக்கோம்... வேட்டி எதுக்கு’ என்று சுருட்டி வைத்திருந்தது அந்தக்கால பிரபலமான சினிமா காமெடி.

இதெல்லாம் காமெடி மட்டுமில்ல. உண்மையாகவே இப்படியெல்லாம் நடக்குதாம். எல்லாம் கொரோனாவால வந்த திடீர் டிரெண்டுதான். அத்தியாவசிய சேவையில் உள்ள அலுவலகங்கள் மட்டும்தான் தற்போது இயங்கி வருகின்றன.  இவற்றில் பல ‘வீட்டில் இருந்து வேலை’ திட்டத்தைத்தான் செயல்படுத்தி வருகின்றன. ஆனால், சில ஐ.டி. நிறுவனங்களில் வீடியோ கான்பரன்சிங் உண்டு. வீட்டில் இருக்கும்போது வீடியோ கான்பரன்சிங்கில் பேசும்போது, வெறும் டிரவுசரை போட்டுக்கொண்டு மேலே மட்டும் டிப் டாப்பாக சட்டை, டை சகிதம் அமர்ந்து விடுகின்றனராம். சில நிறுவன அதிகாரிகளே இதை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரொம்ப பேரு வெங்காயம் நறுக்கிக்கிட்டே வேலை கண் கலங்க செய்யறாங்களாம். ஒரே நேரத்துல வேலை மேலயும், வீட்டம்மா மேலயும் அம்புட்டு பாசம்.

 அவ்வளவு ஏன்? அமெரிக்காவில் கூட ஒரு செய்திச் சானலில் நிருபர் பேண்ட் அணியாமல் மேலே கோட்டு சூட்டு சகிதம் டிப்-டாப்டாக அமர்ந்து கொண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஏபிசி என்ற அந்த செய்தி சானலில் ‘குட் மார்னிங் அமெரிக்கா’ என்ற நிகழ்ச்சி வருகிறது. அதில் பேசிய நிருபர் வில் ரீவ், சுருளி ராஜன், விவேக் பாணியில் யோசித்திருப்பாரு போல. ‘வீட்ல தான் இருக்கோம். கேமரா இடுப்புக்கு மேலதான் போக்கஸ் ஆகுது. இதுக்கு எதுக்கு பேண்ட்’ என அசால்டாக ஜட்டியோடு அமர்ந்திருக்கிறார். ஆனால் பாவம், கேமரா கீழே உத்து பாக்குதேன்னு அவருக்கு தெரியவே இல்ல. டிவில நிகழ்ச்சி ‘லைவ்வா’ போகும்போதுதான் விபரீதமே புரி்ந்திருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு டிரான் மூலமாக மருந்துச்சீட்டு கொண்டு போவது பற்றிய நிகழ்ச்சி அது.

ஆனால், கேமரா போக்கஸ் மாறியதால் மானம் காத்துல பறந்துடுச்சு. சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.   ஆனாலும் அந்த மனுஷன் அசரல. காலையில் அன்றாட கடமைகளை முடித்து விட்டு சீக்கிரமே ரெடியாகிட்டேன். ஆனா, ஒரு டிபரண்ட் ஆங்கிள்ல எடுத்துட்டாங்க அவ்ளோதான். சோஷியல் மீடியாவுலயும் பிரபலமாகிடுச்சு. அட போகட்டும் விடுங்க பாஸ். பேண்ட், பெல்ட் போட்டு முழு டிரெஸ்ல ஜென்டில்மேனா வீட்டுல இருந்தே வேலை பார்க்குறவங்க எனக்கும் டிப்ஸ் கொடுத்தா நல்லது’ அன்று அலட்டிக்கொள்ளாமல் டிவிட்டரில் போட்டிருக்கிறார். வீட்ல இருந்து ஆபீசுக்கு வீடியோ சாட்டிங் பண்ணவங்க ரொம்ப கவனமா இருங்க… கேமரா கவுந்துராம பாத்துக்குங்க… படத்தோட மானமும் பறந்துரும். அவ்ளோதான்.

Tags : Vella ,band , Photo, Vivek, tie t-shirt
× RELATED வெல்லம் மூட்டைக்கு ரூ.60 உயர்வு