×

கொரோனா தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த 64 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த 64 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.    இது குறித்து அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த், நிதித்துறை துணை செயலாளர் கிருஷ்ணா உன்னி, சென்னை மாநகர தலைமையிட இணை ஆணையர் ஏ.ஜி.பாபு, சென்னை எஸ்சிஆர்பி டிஎஸ்பி சங்கரநாராயணன் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் டிட்கோ செயல் இயக்குனர் கார்த்திகேயன், சென்னை சிபிசிஐடி எஸ்பி மல்லிகா உட்பட 4 பேர் கொண்ட குழுவும், ராயபுரம் மண்டலத்தில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், பெண்கள்,

குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி ராஜேஸ்வரி உட்பட 4 பேர் கொண்ட குழுவும், திருவிக நகர் மண்டலத்தில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழக திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் ஆகியோர் அடங்கி 4 பேர் கொண்ட குழுவும், அண்ணா நகர் மண்டலத்தில் டிடிசி இயக்குனர் சந்திர சேகர் சாஹாமூரி, சென்னை என்ஐபிசிஐடி எஸ்பி கலைச்செல்வன் உட்பட 4 பேர் கொண்ட குழுவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை இயக்குனர் கோபாலா சுந்தர ராஜ், சென்னை அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி ஆதிமூலம் உட்பட 4 பேர் கொண்ட குழுவும் பணிகளை மேற்கொள்வார்கள்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் தமிழ்நாடு மின்வாரிய இணை இயக்குனர் வினீத், மத்திய புலனாய்வு பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் உட்பட 4 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் மண்டலத்தில் சமாஹ்ரா சிக்ஷா மாநில கூடுதல் திட்ட இயக்குனர் வெங்கடேஷ், சிபிசிஐடி டிஎஸ்பி ஆரோக்கிய ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவும்,  அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்தில் பைபர்நெட் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், என்ஐபி சிஐடி டிஎஸ்பி ரியாஜூதின் உட்பட 4 பேர் கொண்ட குழுவும், அடையாறு, பெருங்குடி சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய செயல் இயக்குனர் சந்திர லேகா, சிபிசிஐடி கனகராஜ் உட்பட 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, திருப்பூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய இணை மேலாண்மை இயக்குனர் நிர்மல்ராஜ் உட்பட 4 பேர் கொண்ட குழுவும், கோவையில் கனிமவளத்துறை இயக்குனர் சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி உட்பட 8 பேர் கொண்ட குழுவும், மதுரையில் பழனி தண்டாயுதபாணி செயல் அலுவலர் ஜெயசந்திரா பானு ரெட்டி, தொழில்துறை துணை செயலார் பாலசுப்ரமணியன் உட்பட 8 பேர் கொண்ட குழுவும், சேலத்தில் பட்டு துணி நூல் இயக்குனர் ஸ்ரீவெங்கட பிரியா உட்பட 4 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : IPS , Corona, 64 IAS, IPS Officers, Govt
× RELATED இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் ஆன...