×

சீனாவின் தடுப்பூசி பரிசோதனைக்கு பாகிஸ்தான் பலிகடா நோயாளிகள் இறக்கலேன்னா உங்களுக்கு தான் முதல் தடுப்பூசி: இறந்தா நஷ்டஈடும் பல கோடி நிதியுதவியும் தருவதாக உறுதி

பீஜிங்: கொரோனா வைரஸ் கொல்லியை தடுக்க உங்களுக்கு முதல் முதலாக தடுப்பூசி சப்ளை செய்கிறோம். பரிசோதனையை உஙகள் மக்களிடம் செய்யுங்கள். அவர்கள் பிழைத்தால் உங்களுக்கு தான் முதல் சப்ளை.  இறந்தால் கோடிகளில் இழப்பீடு தருகிறோம் என்று சீனா கூறியுள்ளது. பொதுமக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத பாகிஸ்தான், இதற்கு உடனே தலையசைத்து விட்டது. இந்த அதிர்சசி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான வியான் டிவி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   அது தன் செய்தியில் கூறியிருப்பதாவது: சீனா என்ன சொன்னாலும் தலையாட்டக்கூடிய நாடு எது என்றால் பாகிஸ்தான் தான். அதன் கட்டமைப்பு முதல் ராணுவம் வரை எல்லாவற்றுக்கும் அள்ளி அள்ளி தருகிறது சீனா. சீனாவில் உள்ள சினோபார்மா  என்ற மருந்து ஆராய்ச்சி கம்பெனி, பிரபலமான நிறுவனம். இது தான் மற்ற கம்பெனிகளை விட அதிக ஆய்வுகளை செய்து தடுப்பூசிகளை கண்டுபிடித்து விற்பனை செய்து வருகிறது.

 இந்த சினோபார்மா தான், இதுவரை 80 சதவீத வைரஸ்களுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து உலகம் முழுக்க விற்பனை செய்து வருகிறது. இப்போது கொேரானா வைரஸ் அழிக்கும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதை பரிசோதனை செய்ய ஆளை தேடுகிறது. பாகிஸ்தான் மூலம் இந்த பரிசோதனையை செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டது. எதற்கும் தலையாட்டும் பாகிஸ்தான் இதற்கு மட்டும் மறுக்கவா போகிறது.  இது தொடர்பாக சினோபார்மா கம்பெனி தலைமை இயக்குனர் லீ குவான் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான முக்கிமான பாகிஸ்தான் சுகாதார ஆய்வு அமைப்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 21 ம்  தேதி இந்த கடிதம்  அனுப்பப்பட்டுள்ளது.
  ‘நாங்கள் கொரோனா வைரசை அழிக்க தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளோம். இதனால் வைரஸ் அழிந்து விடுமா என்று எங்களுக்கு தெரியாது.  

இதை நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகள் இறந்தால் அதற்கு இழப்பீடு பல கோடிகளை தரத்தயார்; பிழைத்து கொண்டால், உங்கள் நாட்டுக்குத்தான் தடுப்பூசி முதல் சப்ளை. அதன் பின் மற்ற நாடுகளுக்கு தருவோம்’ என்று கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதம், பாகிஸ்தான் சுகாதார ஆய்வு அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் அமீர் இக்ரம் என்பவருக்கு அனுப்பபப்ட்டுள்ளது.    இந்த கடிதத்தை பார்த்ததும் மறு்க்காமல் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டு விட்டது என்பது தான்  இன்னொரு அதிர்ச்சியான தகவல்.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைப்பின் தலைவர் அமீர் கூறுகையில், ‘‘இப்படிப்பட்ட  பரிசோதனையை செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதில் வெற்றி பெற்றால் எங்களுக்கு பெரிய அளவில் மருத்துவ பலன்கள் கிடைக்கும்’’ என்றார். ‘‘நோயாளிகள் மீது பரிசோதனை செய்யும்போது இறந்து விட்டால் என்னாவது?’’ என்று கேட்டதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.    சினோபார்மா இயக்குனர் கூறுகையில், இது எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வர்த்தக ஒப்பந்தம் என்று மட்டும் கூறினார்.

Tags : Chinese ,Pakistan , China, Vaccine Testing, Pakistan
× RELATED கொரோனா தடுப்பு மருந்தை...