×

தாலி கட்ட மதுரையில் இருந்து பாஸ் வாங்கி வந்த மாப்பிள்ளை: கோவில்பட்டி அருகே எளிமையான முறையில் நடைபெற்ற இரண்டு திருமணங்கள்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே எளிமையான முறையில் நடைபெற்ற இரண்டு திருமணங்கள். இதில் ஒரு தம்பதியினர் திருமணம் முடிந்த கையுடன் காரில் ஊர்வலமாக வீட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக டூவிலரில் தங்களுடைய வீட்டிற்கு திரும்பினார். உலகினை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக திட்டமிடப்பட்டு இருந்த பல திருமண நிகழ்ச்சிகள் எளிய முறையில் நடைபெற்று வருகிறது. சிலர் திருமண நிகழ்வினை மாற்றியும் அமைத்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயயுரத்தில் சங்கர் – மாலினி, சரவணன் – அமுதா ஆகிய இரு ஜோடிகளின் திருமணம் அங்குள்ள வண்டி மலைச்சியம்மன் – மலையன் சுவாமி திருக்கோவிலில் எளிமையான முறையில் குறைந்த நபர்களுடன் நடைபெற்றது.

திருமணம் செய்ய மணமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். இதில் சங்கர் – மாலினி தம்பதியினர் திருமணம் முடிந்தவுடன் தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இது குறித்து மணமகன் சங்கர் கூறுகையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த திருமணம் திட்டமிடப்பட்டு இருந்தாகவும், மிக பெரிய அளிவில் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தோம், திருமண வரவேற்பு, மணமக்களை காரில் ஊர்வலம் அழைத்து செல்வதற்கும் ஏற்பாடு செய்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்பொழுது எளிய முறையில் திருமணம் நடைபெற்று, டூவிலரில் வந்ததாகவும், மேலும் கொரோனா ஊரடங்கின் போது மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தான் மாட்டிக்கொண்டதாகவும், பின்னர் தனது திருமண அழைப்பிதழை காட்டி, பாஸ் வாங்கி தான் திருமணத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : weddings ,Kovilpatti ,Madurai Groom ,Bally Buy The Bali: Kovilpatti , Thali, Madurai, pass, Kovilpatti, Weddings
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!