×

மயிலாப்பூரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் பீதி

சென்னை: மயிலாப்பூரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தரமணியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டு  ஓமாந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக மாநகராட்சி மருத்துவ பணியாளர்களுக்கு அவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் என 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து 11 பேரும் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் ஒரே பகுதியில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரானா தொற்று உறுதியான சம்பவம் அந்த பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Tags : street ,Mylapore ,One Street ,Coronation: Public Panic , Mylapore, Corona
× RELATED மகாராஷ்டிரா சென்றுவந்ததை மறைத்த...