×

ஊரடங்கால் தேனி மாவட்டத்தில் செங்கல் தயாரிப்பு பணி முடக்கம்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு

வருசநாடு: கொரோனா ஊரடங்கால் தேனி மாவட்டத்தில் செங்கல் சூளைப்பணி முடங்கிக் கிடக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, குமணன்தொழு, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் செங்கல் தயாரிக்கும் சூளைகள் அதிகமாக உள்ளன. இப்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதங்களாக சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணி நடக்கவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானமின்றி உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே செங்கல்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக வருசநாடு முகமது அனிபா கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். வருமானமின்றி அவதிப்படுகின்றனர். எனவே, வெளி மாவட்டங்களுக்கு செங்கல்களை அனுப்பு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.



Tags : strike ,district ,Urangal Theni ,Theni district , Brick-making ,strike ,n Urangal Theni district, Thousands, workers laid off
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து