×

480 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடல்நிலை பாதித்த தாயை பார்த்த மகன்: ஏனாமில் நெகிழ்ச்சி சம்பவம்

* மகனை பார்த்த பின் உயிர் பிரிந்தது

புதுச்சேரி: ஏனாமில் உடல்நிலை பாதித்த தனது தாயை 480 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அவரது மகன் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நாடு முழுவதும் ஊரடங்கு காலத்தில் பல்வேறு அத்தியாவசிய பணி நிமித்தமாக உறவினர்களை சந்திக்க பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நடைபயணம், சைக்கிள் பயணம், பைக்கில் பயணம் ஆகியவற்றை பொதுமக்கள் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தைகூட கையில் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழல் தற்ேபாது நாட்டில் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் உடல்நலம் பாதித்த தனது தாயை பார்ப்பதற்கு 480 கி.மீ.தூரத்துக்கு சைக்கிள் பயணத்தை மகன் மேற்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்று உள்ளது. ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ள ஏனாம், அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ரேவுனு தனது மனைவி லட்சுமியுடன் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.

 தற்போது தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்ட தனது தாய் மகாலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உறவினர்களால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பஸ், ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்தும் இல்லாத சூழலிலும் தனது மனைவி லட்சுமியுடன் தனித்தனி சைக்கிளில் ரேவுனு ஏனாமிற்கு புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் இத்தம்பதியை போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்த நிலையில், தேவையான உதவிகளை கிராம மக்கள், போலீசாரிடம் பெற்று சுமார் 480 கி.மீ. பயணத்தை முடித்து வீடு வந்தடைந்தனர்.  வெளிமாநிலத்தில் இருந்து ரேவு னு, லட்சுமி இருவரும் ஏனாம் வந்ததால் அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர். பின்ன தாயை பார்க்க அனுமதித்தனர். தனது மகனை பார்த்த சிறிது நேரத்திலேயே மகாலட்சுமியின் உயிர் பிரிந்தது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Tags : bicycle trip ,elasticity incident ,Eanamil , 480 km,Son , sick mother ,bicycle trip
× RELATED மது அருந்த பணம் தர மறுத்ததால் இரும்பு...