×

மக்கள் நினைத்தால் பச்சை மண்டலமாக மாற்றலாம்; விவசாய பணிகளுக்கு எந்த தடையும் செய்யக்கூடாது...மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது,  பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:

* தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.   
* அதிக மக்கள் தொகையால் நகர்ப்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிக்கல்.
 
* 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களை தவிர்க்க வேண்டும்.
* முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைதிட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* 100 நாள் பணியின் போது, கூட்டம் சேராமல் சரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும்.

* விவசாய பணிகளுக்கு பொதுமுடக்கத்தில் முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது;
* விவசாய விதை பொருட்களை வைப்பதற்கு கிடங்குகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
* உணவு பதப்படுத்துதல், உற்பத்தி ஆலைகளுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது.
* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது.
* விவசாய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்க கூடாது.

* ரேஷன் கடை பொருட்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
* டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.
* டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகத்தான்.
* ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

* டோக்கன் வழங்கும் போதே அதுகுறித்த வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
* மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.
* ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மே மாதத்திற்க்கான ரேஷன் பொருட்கள் முறையாக வழங்குவதை ஆட்சியர்கள் உறுதி செய்யவேண்டும்.

* வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது. தமிழகத்தில் அந்த நிலை இல்லை.
* அம்மா உணவகங்கள் மூலம் மக்கள் பசியாறுகின்றனர்.
* அம்மா உணவங்கள் மூலம் தினமும் 7 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர்.
* அம்மா உணவகம் மூலம் ஏழைகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

* காய்கறி, மளிகை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.
* காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கிருமி நாசினி அனைத்து பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்.
* நோய்ப்பரவலைத் தடுக்க தடை செய்யப்பட்ட பகுதியில் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
* தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வெளியே யாரும் வரக்கூடாது, உள்ளே யாரும் போக்ககூடாது.
* நகர பகுதிகளில் உள்ள பொதுக்கழிவறைகளை தினமும் 3 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

* நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது.
* பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும்.
* அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையிலேயே உள்ளது
* கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

* அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும்.
* தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது.

* பிறமாநில தொழிலாளர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பிற மாநில எல்லைகளில் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
* உரிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.

* பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும்.
* கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் தொழில் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம்.
* போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.
* சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


Tags : zone ,district rulers ,Palanisamy , People can turn into a green zone if they think; No restrictions on agricultural work ... Palanisamy's advice to district rulers
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...