×

மும்பையில் 3 கான்ஸ்டபிள்கள் பலி எதிரொலி: 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு கட்டாய விடுப்பு

மும்பை: மும்பையில், 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 20 அதிகாரிகள் உட்பட 107 போலீசாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதில் மும்பையைச் சேர்ந்த மூன்று போலீசார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை தொடங்கி அடுத்த மூன்று நாட்களில் 3 கான்ஸ்டபிள்கள் கொரோனாவுக்கு பலியானது மும்பை காவல்துறை வட்டார்த்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு பலியான மூன்று போலீசாரும் 50 வயதை கடந்தவர்கள் என்பதும், ெகாரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள போலீசாரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால், மும்பையைச் சேர்ந்த 55 வயதுக்கு மேற்பட்ட அனைத்து போலீசாரும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதர உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் போலீசாரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதாக மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளரான துணை போலீஸ் கமிஷனர் பிரணாய் அசோக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: போலீஸ் படையினர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். போலீசாருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்காக வைட்டமின் மற்றும் புரோட்டீன் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் போலீசாருக்கு, டாக்டர்களின் அறிவுரைப்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது என்றார்.

Tags : constables ,policemen ,Mumbai , Mumbai, 3 constables, killed, policemen
× RELATED திருவண்ணாமலையில் நடந்த சாலை...