×

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள் பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா? துரைமுருகன் கேள்வி

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்கான “ரேபிட் டெஸ்ட்” கருவிகளை உற்பத்தி செய்த சீனாவில், அதன் விலை ரூ.225 என்றும், சரக்குக் கட்டணம் ரூ.20 என்றும், மொத்தம் ரூ.245 என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது, மத்திய அரசா, திமுகவா? மருத்துவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உடைகள் இல்லாத நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து வைத்து, அதில் பணியாற்றுவோருக்கு முழுமையான கவச உடைகள் வழங்கியிருப்பதற்கான அவசர அவசியத் தேவை என்ன? ஊரடங்கு காலத்தில் உட னடியாக மனைகளை கட்டிடங் களை விற்க வும் வாங்கவும் ஆலாய்ப் பறப்பது யார்?.

முதலமைச்சரின் கீழ் உள்ள பொதுப்பணித்துறையில், புதிய டெண்டர்களுக்கு நிதிச்சுமையை காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சரின் கீழ் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் 700 கோடி ரூபாய்க்கு புதிய கட்டிடங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டிருப்பது எதற்காக, யாருக்காக?.  டெல்டா பாதுகாப்பு மண்டலத்திலிருந்து மணல் அள்ளுவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?. கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் என்பதன்றி வேறென்ன செய்திருக்கிறது இந்த அரசு?.
ஒட்டுமொத்த உரிமை களையும் அடகு வைத்து, சிக்கிய வழக்குகளில் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்காக, மேலும் மேலும் தவறுகளைச் செய்பவர்கள், நோய்த்தொற்று குறித்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் விழிப்புணர்வை உண்டாக்கிய எங்கள் தலைவர் செய்வது அரசியல் என்கிறார்கள்.

ஆமாம்.. அவர் மக்களுக்கான அரசியலைச் செய்கிறார். மக்கள் நலன் காக்க திமுக என்ற பேரியக்கத்தை இந்தப் பேரிடர் காலத்தில் களமிறக்கியிருக்கிறார். மக்கள் போற்றும் அந்த மகத்தான செயல் உங்கள் பார்வையில் அரசியலாகத் தெரிகிறது. நாளும் பொழுதும் ஊழல் செய்யும் உங்களைவிட, மக்கள் நலனுக்கான உரிமைப் போர் அரசியல் செய்யும் எங்கள் தலைவரின் பணி மகத்தானது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Political Frustration, Duramurugan, Corona, Curfew
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...