×

போட்டிகளை நடத்துவது பொறுப்பற்ற செயல்…

பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து ரசிகர்கள்  ஏராளம். ஊரடங்கால் கால்பந்து போட்டிகள் நடக்காததால்  ரசிகர்கள் வெறுத்துப்போயுள்ளனர். இதற்கு ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களும் விதிவிலக்கல்ல.  அங்கு மார்ச் 12ம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா பிரச்னைகள் முடிந்து  மே மாதத்தில் ஸ்பானீஷ் லீக் போட்டிகள் தொடங்கும் என்று கூறப்பட்டது. கூடவே பயிற்சிக்கு முன்பு வீரர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடக்கும் என்றும்  கிளப்கள் சொல்லியிருந்தன. இந்நிலையில் விளையாட்டுகளுக்கு அனுமதி தரும் அதிகாரத்தில் உள்ள நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர்  சால்வடார் இல்லா நேற்று முன்தினம், ‘கோடை காலத்துக்கு முன்பு  கால்பந்து போட்டிகள் தொடங்கும் என்று ஸ்பெயின் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அப்படி ஏதாவது வாக்குறுதி கொடுத்தால் அது பொறுப்பற்ற செயலாகி விடும்’ என்று கூறியுள்ளார். ஸ்பெயினில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து, தொழில்முறை கால்பந்து  போட்டிகள் இப்போதைக்கு இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.


Tags : competitions , European countries, football fans
× RELATED குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி