சில்லி பாயின்ட்…

* இந்திய அணியில் டோனி மீண்டும் இடம் பிடிப்பதற்கு ஐபிஎல் தொடரை தான் நம்பியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று முன்னாள் வீரர்/வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

* கோவிட்-19 நோய்க்கு தடுப்பூசி உருவாக்கப்படும் வரையில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரர் அசந்தா சரத் கமல் தெரிவித்துள்ளார்.

* ஷேன் வார்ன் சுழற்பந்துவீச்சை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எதிர்கொண்ட விதம் மிகவும் தனித்துவமானது. இருவருக்கும் இடையேயான போராட்டம் பூனை - எலி விளையாட்டு போல அத்தனை சுவாரஸ்யம். சச்சின் சில முறை கிரீஸில் இருந்து வெளியே வந்து நின்று அளவு குறைவாகப் போட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவார். சில சமயம் கிரீசுக்குள்ளாகவே பொறுமையாக நின்று அழகான ஷாட்களை அடிப்பார். இப்படி வேறு யாராலும் வார்னை சமாளிக்க முடியாது… என்று ஆஸி. முன்னாள் வேகம் பிரெட் லீ பாராட்டி உள்ளார்.

* இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரை டிசம்பர் 2020ல் தொடங்கி ஜனவரி 2021 வரை நடத்த தயாராக இருப்பதாக இந்திய பேட்மின்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

* கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக ஒழிக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டியை ஒரேயடியாக ரத்து செய்வதைத் தவிர வழியில்லை என்று டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி கூறியுள்ளார்.

Related Stories:

>