×

நாகர்கோவில் வாலிபரின் மன்மத லீலை லேப்டாப்பில் சிக்கிய 80 வீடியோக்கள்: பள்ளி தோழியை கூட சீரழித்த கொடூரம்

நாகர்கோவில்: நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த இறைச்சி கடை வியாபாரி தங்கப்பாண்டியன் மகன் காசி (26). பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்குகளுடன் உலா வருதல் என பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மயங்கிய இளம்பெண்கள் பலர், காசியின் காதலிகள் ஆனார்கள். அப்படி, மயங்கிய இளம்பெண்களுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததுடன், அந்த ஆபாசத்தை வீடியோவாகவும் பதிவு செய்து பணம் பார்க்க தொடங்கினார்.  இந்த பாணியில்தான் சென்னையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடமும் நெருக்கமாகி, அந்த வீடியோவை காட்டி பணம் பறித்தார். தற்போது காவல் நிலையம் வரை சென்று, காசி கைதாகி நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எப்படி இத்தனை பெண்களை தன்னந்தனியாக வீழ்த்த முடிந்தது என்பது பற்றி, தனிப்படை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:- காசியின் லேப்டாப்பில் 80  வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் உள்ள சில வீடியோக்கள் பார்ப்பதற்கு அதிர்ச்சிகரமானதாக உள்ளது. பல தரப்பட்ட பெண்களுடன் மிகவும் ஜாலியாக தனது வாழ்க்கையை கழித்து இருக்கிறார். இவரிடம் சிக்கி ஏமாந்த இளம்பெண்கள் பலர், வசதி படைத்தவர்களாகதான் தெரிகிறார்கள். எனவே, காவலில் எடுத்து விசாரித்தால் வீடியோவில் உள்ள பெண்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரி கூறினார்.  

காசி மீது  விமான பணிப்பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளனர். இவர், காசியின் பள்ளி தோழி ஆவார். இருவரும் நாகர்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்துள்ளனர். சென்னையில் விமான பணிப்பெண்ணுக்கான படிப்பில் இருந்தபோதுதான் மீண்டும் காசியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 1.50 லட்சமும், 16 கிராம் தங்க நகைகளையும் வாங்கி விட்டு, தோழிக்கு கம்பி நீட்டினார். பணத்தை திரும்ப கேட்க, ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டினார். ரகசியமாக இதை வைத்திருந்த அந்த தோழி இப்போது  புகார் அளித்துள்ளார்.

‘முதலில் வீடியோ எடுக்கும்போதே தெரியாதா?‘
லேப்டாப் வீடியோவில் காசியின் டிக்டாக் உரையாடலும் உள்ளது. அதில் பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை மையப்படுத்தி, ‘‘பெண்கள் வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறீர்கள். ரொம்ப பெர்பெக்ட்டாக இருப்பதுபோல் பேசுறீங்க. வாய்ப்பை நீங்கள்தான் உருவாக்கி கொடுத்துவிட்டு, இப்போது அம்மா போச்சு. ஆத்தா போச்சுனா எப்படி.? அந்த பெண்ணின் அண்ணனும், அந்த பையனும் ப்ரண்ட். முதலில் வீடியோ எடுக்கும்போதே தெரியாதா?  மோசமானவன் என்று. உடனடியாக அண்ணன்கிட்ட சொல்லி இருக்கலாமே. 4 சுவருக்குள் நடந்ததை நாலாயிரம் பேர் பார்ப்பதுபோல் நீங்கள்தான் செய்கிறீர்கள். எனவே, எல்லா விஷயத்திலும் நீங்கள் பசங்கள மிஞ்ச முடியாது. ஒன்று சொல்றேன். வீட்டில வளருகிற கன்றுக்குட்டி ரோட்டுக்கு தான் போவேனு போனால், லாரியில் அடிபட்டு சாக தான் செய்யும்’’ என்று பேசி இருக்கிறார்.


Tags : Nagercoil ,teenagers ,schoolmate ,school friend , Nagercoil young, laptop, school girlfriend
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...