×

மேட்டூரில் இருந்து ஓசூருக்கு நடந்தே சென்ற மூதாட்டிகள்

*தர்மபுரியில் மீட்பு

தர்மபுரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதம்மாள்(70). இவரது சகோதரி லட்சுமி(68). இவர்கள் இருவரும் கொரோனா தடை உத்தரவுக்கு முன்னதாக, சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஊரடங்கால் அதே பகுதியில் தவித்த இருவரும், மீண்டும் ஓசூர் திரும்ப முயன்றனர். ஆனால், போக்குவரத்து இல்லாததால், இருவரும் நடந்தே ஊருக்கு புறப்படடனர். தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் வந்தபோது உடல் சோர்வு காரணமாக ஓசூர் புறவழிச்சாலை கூட்டுச்சாலை பகுதியில் சாலையோரத்தில் அமர்ந்திருந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், தர்மபுரி வட்டாட்சியர் சுகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று இருவரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். அங்கு, உரிய பரிசோதனைக்கு பின்பு மூதாட்டிகள் இருவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags : Ancestors ,Grandmothers ,Mettur ,Hosur ,Dharmapuri , Dharmapuri,Grandmothers ,mettur ,Hosur ,Lockdown
× RELATED நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு...