×

டிரைவர் கொடூர கொலை தாயுடன் கள்ளக்காதல் வைத்ததால் கொன்றோம்

* மகன் உள்பட 3 பேர் கைது
* பரபரப்பு வாக்குமூலம்

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ரஞ்சித்குமார், மலையம்பாக்கத்தில் உள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் பதுங்கி இருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், மலையம்பாக்கம் விமல் (22), பிரேம் (19), அபி(18) என தெரிந்தது.மேலும் விசாரணையில், ரஞ்சித்குமாருக்கும், விமலின் தாய்க்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவர்கள் தனிமையில் இருப்பதை விமல் பார்த்துவிட்டு, தாயை கண்டித்தார். ஆனாலும், அவர்கள் தொடர்பு நீடித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த விமல், வீட்டை விட்டு வெளியேறினார். இதை கள்ளக்காதல் ஜோடி சாதமாகி கொண்டது.

இதனால் ஆத்திரமடைந்த விமல், ரஞ்சித்குமாரை தீர்த்துக்கட்ட  தனது நண்பர்களுடன்திட்டம் தீட்டினார். இந்நிலையில் வீட்டில் இருந்த ரஞ்சித்குமாரை , வரவழைத்து, 3 பேரும், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை கொலை செய்தனர். மேலும், அவரது மர்ம உறுப்பையும் அறுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர் எனபோலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத் தனர். அவர்களிடம் இருந்து கொலை செய்ய  பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல்  செய்தனர்.

Tags : murder ,murders , driver , brutal murder , mother
× RELATED சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளரின்...