×

கொரோனா ஊரடங்கால் வரமுடியவில்லை தாயின் இறுதி சடங்கை வீடியோகாலில் பார்த்து கண்ணீர் விட்ட ராணுவ வீரர்: சேலம் அருகே பரிதாபம்

மேச்சேரி: சேலம் அருகே மேச்சேரியில் தாயாரின் இறுதி சடங்கிற்கு, ஊரடங்கால் வரமுடியாத ராணுவ வீரர், ராஜஸ்தானில் இருந்து வீடியோகாலில் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது, கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி அழகா கவுண்டனூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது (65). இவர்களது மகன் சக்திவேல்(42). ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சக்திவேலுவின் தாய் மாது, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.ராஜஸ்தான் ரெஜிமெண்ட்டில் உள்ள சக்திவேலுக்கு செல்போன் மூலம் தந்தை தகவல் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவால் சக்திவேலுவால் ராஜஸ்தானில் இருந்து மேச்சேரிக்கு வர முடியவில்லை. இதனால் வீடியோகால் மூலம் தனது தாயின் இறுதி சடங்கை பார்த்து சக்திவேல் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைப்பார்த்த உறவினர்களும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ, வாட்ஸ்அப் மற்றும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags : soldier ,funeral ,Salem , Soldier ,wears tears , mother's funeral
× RELATED புல்வாமாவில் பாதுகாப்பு படையினர்...