×

ஊரடங்கு காரணமாக மதுவை மக்கள் மறந்துவிட்டனர் தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஊரடங்கு காரணமாக மதுவை மக்கள் மறந்திருப்பதால், தமிழகத்தில் மதுக்கடைகளை  நிரந்தரமாக மூட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய ஊரடங்கால் மதுவை மக்கள் மறந்துள்ளனர். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், மதுவுக்கு அடிமையானவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவர், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று மறுத்தனர். ஒரு சிலர் மதுவில் இருந்து மீள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானது உண்மை தான் என்றாலும் கூட, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் மீண்டு வந்த அவர்கள், இப்போது புதிய உற்சாகத்துடன் எந்த பணியையும் செய்ய முடிவதாக தெரிவித்துள்ளனர்.

குடி, உடல்நலக்கேடு என சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர். இது நீடிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பம். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பதுதான். தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020-21ம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.20 லட்சத்து 91 ஆயிரத்து 896 கோடி ஆகும்.

மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும்.  அதனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் தமிழக அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : state ,government ,Ramadoss ,Pub , Curfew, Tamil Nadu, Liquor Store, Tamil Nadu Government, Ramadas
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...