×

சில்லி பாயின்ட்…

*  இத்தாலியில் தொழில்முறை கால்பந்து அணிகளை சேர்ந்த வீரர்கள் மே மாதத்தில் மீண்டும் பயிற்சியைத் தொடங்க அந்நாட்டு பிரதமர் அனுமதித்துள்ளார். எனினும், அங்கு பிரபலமான ஏ டிவிஷன் கால்பந்து போட்டித் தொடர் எப்போது தொடங்கும் என்பது பற்றி அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
* ஊரடங்கு காரணமாக அடிப்படை மளிகைப் பொருட்கள் வாங்கக் கூட வழியில்லாமல் தவித்து வருவதாக இந்திய மகளிர் கோ-கோ அணி கேப்டன் நஸ்ரீன் தகவல் தெரிவித்ததை அடுத்து, டெல்லி காவல்துறை சார்பில் அவருக்குத் தேவையான ரேஷன் பொருட்கள் அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*  கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கியுள்ள தடகள வீரர், வீராங்கனைகள் தங்கள் உடல்தகுதியை பராமரிக்கும் வகையில், தேவையான பயிற்சி உபகரணங்களை இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளது.
* நெருக்கடியான இந்த தருணத்தில் வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பேராசையுடன் சுயநலமாக செயல்பட மாட்டார்கள். நிச்சயம் அதற்கு ஒத்துழைப்பார்கள்… என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 80 சதவீத ஊழியர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து சூப்பர் மார்க்கெட்களில் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், அடுத்து சம்பள கட் தொடர்பாக வீரர்கள் சங்கத்துடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
*  தற்போதுள்ள சூழலில் கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்து மீண்டும் டென்னிஸ் போட்டிகள் முழுவீச்சில் தொடங்கும் என்ற நம்பிக்கையே ஏற்படவில்லை… என்று ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் மிகுந்த விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.Tags : Tournament Series ,A. Division Football , A. Division Football Tournament Series
× RELATED சில்லி பாயின்ட்…