இணையதளத்தில் கவிதை புத்தகம் வெளியிட்ட பார்த்திபன்

சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு சுவையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது  ‘144 கவி? தை...தை.. கள்’ என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 50 பக்கங்கள் கொண்ட இந்த கவிதை நூலில் கொரோனாவுடன் ஒரு பெண்ணை ஒப்பிடும் அழகியல் கவிதைகளும், காதல் கவிதைகளும் இடம் பெற்றுள்ளது. இதனை அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம். பார்த்திபன் ‘கிறுக்கல்கள்’ என்ற கவிதை நூல் உள்பட பல நூல்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>