×

தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த நடிகர் இர்பான் கான்

சென்னை: ஆஸ்கர் விருதுகளை வென்ற லைஃப் ஆஃப் பை என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தவர் இர்பான்கான் ‘பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர். அங்கு அவரது தாய் சயீதா பேகம். மற்றும் சகோதரிகள் வசிக்கிறார்கள்.
இர்பான்கானின் தாய் சயீதா பேகம் முதுமை காரணமாக பலவேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை ஜெய்ப்பூரில் நடந்து.  குறைவான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மும்பையில் வசிக்கும் இர்பானால் ஊரடங்கு காரணமாக  தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் உறவினர்கள் செல்போன் மூலமாக இறுதி சடங்குகளை  நேரடியாக காட்ட அதை பார்த்து கதறி அழுதார் இர்பான் கான். பின்னர் தாய்க்காக தனது மும்பை வீட்டில் இருந்தபடியோ இறுதி சடங்கில் மகன் செய்ய வேண்டிய காரியங்களை செய்தார். சயீதா பேகம் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Irfan Khan ,funeral ,attendees , Mother's funeral, actor Irfan Khan
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...