×

காய்ச்சல், இருமல், சுவாச கோளாறு மட்டுமில்ல... ஊதா நிற கொப்புளம் வந்தால் கொரோனா: இங்கிலாந்து, கனடா, அமெரிக்க நிபுணர்கள் தகவல்

லண்டன்: காய்ச்சல், இருமல், சுவாச கோளாறுடன் காலில் ஊதா நிற கொப்புளம் வந்தால் கொரோனா அறிகுறி என்று இங்கிலாந்து, கனடா, அமெரிக்க தோல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் அறிகுறிகளாக ​​காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறுகள்,  சோர்வு, தலைவலி, உடல் வலி போன்றவை கருதப்படுகிறது. நோய்தொற்று இருந்தால்,  பாதிக்கப்பட்ட நபர் நிமிடத்திற்கு 30 முறை வரை சுவாசிக்கிறார். அதேநேரத்தில் சாதாரண நபர் 12-20 முறை சுவாசிக்கிறார். ஸ்பெயின், பிரான்ஸ்  மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில், கொரோனா அறிகுறியான காய்ச்சலுக்கு முன்னர்  பாதிக்கப்பட்டவர்களின் கால்களில் கொப்புளங்கள் தோன்றி உள்ளன.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு கொரோனா வைரசின் புதிய அறிகுறிகளாக கொப்புளங்கள் உருவாகியுள்ளன. அவை அம்மை நோயின் போது ஏற்படும் கொப்புளங்கள் போன்றே இருந்துள்ளன. இவை, தொற்றுநோய்க்கான அறிகுறி என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் பொது மருத்துவர் டாக்டர் டேனியல் கார்டின் கூறுகையில், ‘பாதங்களில் ஏற்படும் கொப்புளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டறிய முடியும். அவை வேறு எந்த அறிகுறிகளையும் காட்டாது. குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு அதிகமாகக் காணப்படுகிறது. மீதமுள்ள அறிகுறிகள் அரிதாகவே தோன்றுகிறது.

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் தோல் மருத்துவர்கள் இதைக் கண்டிருக்கிறார்கள். இது ஒரு சிலந்தி அல்லது பூச்சி கடித்தால் ஏற்பட்டதாக மருத்துவர்கள் அஞ்சினர். ஆனால் அவை பரவும்போது அவை தொற்றுநோயுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது’ என்றார். மேலும், கனடா தோல் மருத்துவ அமைப்பின் தலைவர் டாக்டர் கேரி பூர்டி கூறுகையில், ‘நோயாளிகளின் கால்விரல்கள் மற்றும் கால்விரல்களின் நுனிகளில் சிவப்பு மற்றும் ஊதா நிற கொப்புளம் அல்லது புண்கள் ஏற்பட்டு லேசான வலியை ஏற்படுத்தும். அவை, ‘கோவிட்-டோ’ மற்றும் ‘கோவிட்-ஹேண்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளன. குளிர் பிரதேச நாட்டில் பனிப்பொழிவின் போது இதுபோன்ற கொப்புளங்கள் மக்களிடையே காணப்படுகின்றன.

ஆனால், இவை கொரோனாவுடன் தொடர்புடையவையாக உள்ளன. அதேநேரத்தில், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்க உட்பட உலகெங்கிலும் உள்ள தோல் மருத்துவர்களிடம் கொரோனா நோயாளிகளுக்கு கொப்புளங்கள் வந்தால் சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு கொப்புளங்கள் உள்ளன’ என்றார். மேலும், அமெரிக்க பயோடெக்னாலஜி தகவல் மற்றும் மாசசூசெட்ஸின் தேசிய மையத்தின் டாக்டர் சூசன் வில்காக்ஸின் கூறுகையில், ‘தொற்று சில உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், அவை வீக்கமடைந்து தோல் திசுக்களை சேதப்படுத்துகிறது. அதிலிருந்து கொப்புளங்கள் உருவாகின்றன’ என்றார்.


Tags : US ,Canada ,experts ,UK , Fever, cough, respiratory disorder, purple blister, corona
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...