×

கலசபாக்கம் பகுதிகளில் மர்மநோயால் அவதிப்படும் கால்நடைகள்: உரிய சிகிச்சை அளிக்க விவசாயிகள் கோரிக்கை

கலசபாக்கம்: கலசபாக்கம் பகுதிகளில் கால்நடைகளை மர்ம நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முகாம் அமைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பகுதி மக்கள் விவசாய தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். அதிகளவு கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மேல்சோழங்குப்பம், வீரளூர், பட்டியந்தல், கிடாம்பாளையம், ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பசுக்கள் மற்றும் காளை மாடுகளுக்கு மர்ம நோய் பரவி வருகிறது.

கண்களில் பூ விழுதல், கால்களில் வீக்கம், முடிகள் உதிர்ந்து ரத்த கசிவு போன்றவை ஏற்படுகிறது. பசுக்களின் பால் உற்பத்தியும் பெருமளவு குறைந்துள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குக்கிராமங்கள் என்பதால், கால்நடைகளுக்கான மருந்துகள் கூட வாங்க முடியவில்லை. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும், விளைபொருட்களை விற்க முடியாமலும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது கால்நடைகளும் மர்ம நோயால் பாதிக்கப்படுவதால் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து, உரிய சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : areas ,Kalasakkam , Catarrh, mastitis, cattle
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...